.
சற்று முன் :
என் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பின்னால் பாரதீய ஜனதா உள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்
ராகுல் காந்திக்கு ஆதரவாக அமேதி தொகுதியில் சோனியா காந்தி இன்று பிரச்சாரம்
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி

Advertisement

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை கொலை செய்தவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

கல்பாக்கம்,

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை வெட்டிக்கொலை செய்தவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெண் வெட்டிக்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கண்ணன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுசீலா(வயது 27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை சுசீலா, அருகில் உள்ள வயல் வெளியில் நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன்(28) என்ற வாலிபர், தனது ஆசைக்கு இணங்குமாறு சுசீலாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர், கத்தியால் சுசீலாவின் கழுத்தில் வெட்டிக்கொலை செய்தார்.

பின்னர் போலீசுக்கு பயந்து லட்சுமணனும் விஷம் குடித்தார். தற்போது அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்தநிலையில் சுசீலாவை வெட்டிக்கொன்ற லட்சுமணனை கைது செய்யக்கோரி சுசீலாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று மதியம் 2.30 மணியளவில் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் கிராமத்தில் கடலூர்–மதுராந்தகம் செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுராந்தகம் தாசில்தார் உ.ரமா மற்றும் செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மருத்துவமனையில் போலீசாரின் கண்காணிப்பில் லட்சுமணன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் வீடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 3 மணியளவில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read