.
சற்று முன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் குவிப்பு
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

காரைக்குடியில் தீபாவளி பண்டிகைக்காக செட்டிநாட்டு பலகாரம்

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

காரைக்குடி,

தீபாவளி பண்டிகைக்காக காரைக்குடி பகுதிகளில் செட்டி நாட்டு பலகா ரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நட ந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் வசிப் பவர்கள் இங்கு வந்து பலகாரங்களை வாங்கி செல்கின்றனர்.

செட்டி நாட்டு பலகாரங்கள்

இந்து மக்களின் முக்கிய விழாவாக தீபாவளி கொண் டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி கொண்டாடப்படு கிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு ஆகும்.

காலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனுக்கு பலகாரங்கள் செய்து படைத்து பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல காரங்களை தங்களது உறவி னர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். தீபாவளி பண்டிகை பலகாரம் என் றாலே செட்டிநாட்டு பலகாரங் களுக்கு தனி மவுசு தான்.

மேலும் இங்கு தயார் செய்யப்படும் பலகாரங்கள் மிகவும் சுத்தமானதாகவும், தரமானதாகவும், ருசியாகவும் இருப்பதால் அனைவரும் விரும்புவர். செட்டிநாட்டு பலகாரம் என்றால் மக்களிடம் ஒரு தனிப்பிரியம் உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன் னும் 14 நாட்களே உள்ள நிலை யில் காரைக்குடி பகுதியில் செட்டிநாடு பலகாரம் செய் யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து செட்டிநாட்டு பலகாரங்கள் தயார் செய்யும் பெண் ஒருவர் கூறியதாவது:-

வெளிநாட்டினர் விரும்பும் பலகாரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாங்கள் லட்டு, மைசூர்பா, பாதுஷா, மிச்சர், தேன்குழல் முறுக்கு, கை முறுக்கு, சீப்பு சீடை, அதிரசம், மணகோலம், ரிப்பன் பக் கோடா, கார முறுக்கு, தட்டை, மாவு உருண்டை, பாதாம் அல்வா ஆகிய பலகாரங்கள் செய்து வருகிறோம். ஆனால் ஒவ்வொரு தீபாவளி பண்டிகை யின் போது இவை அனைத்தும் வாடிக்கையாளர் கள் விரும்பி சாப்பிடும் பல காரம் ஆகும். இந்த பலகாரம் செய்யும் பணி கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகி றோம்.

ஆனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த பலகாரங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்தாண்டு இந்த மாவட் டத்தை தவிர தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர் நேரடி யாக இங்கு வந்து இந்த செட்டிநாட்டு பலகாரங்களை வாங்கி செல்கின்றனர்.

தரமான பொருட்கள்

ஒரு சில வாடிக்கையாளர் இந்த செட்டிநாட்டு பலகாரங் களை வெளிநாட்டில் வசிக்கும் தங்களது உறவினர்களுக்கு அனுப்பி அவர்கள் அந்த நாட்டு வாசிகளுக்கும் கொடுக் கின்றனர். மேலும் இங்கு தயார் செய்யும் இந்த பலகாரங் கள் அமெரிக்கா, கனடா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டில் உள்ள உற வினர்களுக்கு அனுப்பி வைத்து வருடந்தோறும் அவர்கள் இந்த செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுகின் றனர்.

தரமான பொருட்கள் கொண்டு தயார் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து அனுப்பி வைக்கப்படும் இந்த பலகாரங்கள் ஒரு மாதம் காலம் வரை கெட்டு போகாமல் அப்படியே அதே சுவையுடன் இருப்பது இந்த பலகாரத்தின் மற்றொரு தனிச்சிறப்பாகும். மேலும் இங்கு தயார் செய்யப்படும் பலகாரங்கள் அனைத்தும் கலப்படம் இல்லாத ஆயிலை கொண்டு தயார் செய்யப் படுவதால் திருமணம் வீட்டில் சீர்வரி¬யில் இந்த செட்டி நாட்டு பலகாரங்கள் இடம் பெறுகின்றன.

9 சுற்று முறுக்கு

இங்கு முறுக்கு 7சுற்று, 9சுற்று வரை யிலும் தயார் செய்யப்படுகிறது. இவற்றின் விலை ரூ.40லிருந்து விற்கப்படுகிறது. பாதாம் அல்வா கிலோ ரூ.1,700க்கு விற்கப்படுகிறது. மேலும் சர்க்கரை வியாதிகள் உள்ள வர்கள் இங்கு தயார் செய் யப்படும் தேன்குழல், அதிரசம், பணகோலம் ஆகியவற்றை சாப்பிட்டால் எந்த பாதிப்பு வருவதில்லை. அதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம். மேலும் எங்களிடம் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணிக்காக 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின் றனர். இதனால் மற்றவர்களுக்கு ஒரு சிறிய வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடி கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read