.
சற்று முன் :
தேசிய நதிகள் இணைக்கப்பட்டு தமிழக பாசன நீர் பிரச்சனை தீர்க்கப்படும் நரேந்திர மோடி
தோல்வி பயணத்தினால் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடவில்லை: மோடி
ராமேசுவரம் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் நரேந்திர மோடி
இந்திய மீனவர்களை காக்க மத்திய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது நரேந்திர மோடி
யாரும் பசியுடன் தூங்க செல்ல வேண்டாம் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் ராகுல் காந்தி
மோடிதான் நாட்டின் அடுத்த பிரதமர் தனது வாக்கை பதிவு செய்த எடியூரப்பா தகவல்
பாராளுமன்றத் தேர்தல் 2014; ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது வாக்கை பதிவு செய்தார்
பிலிபெட் தொகுதியில் 5 கிராம மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்தனர்

Advertisement

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயுள் காப்பீட்டு துறை 15% வளர்ச்சி அடையும்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

மும்பை

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆயுள் காப்பீட்டு துறை 15 சதவீத வளர்ச்சி காணும் என ஆயுள் காப்பீட்டு கவுன்சிலின் பொது செயலாளர் வி.மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை

இந்தியாவின் மக்கள்தொகை தற்போது 120 கோடியாக உள்ளது. இதில் காப்பீடு செய்து கொள்வதற்கேற்ற வயதுடையோர் அதிகரித்து வருகின்றனர். 2020–க்குள் இவர்கள் எண்ணிக்கை 75 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாழ்க்கைத் தரமும், மருத்துவ வசதிகளும் அதிகரித்து வருவதால் ஒரு இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 74 ஆண்டுகளாக உயர உள்ளது. இதனால் நம் நாட்டில் ஆயுள் காப்பீட்டு துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் நிதிச் சேவை துறையைப் பொறுத்தவரை ஆயுள் காப்பீடு என்பது அதிகம் விரும்பப்படும் இரண்டாவது பெரிய சேமிப்புத் திட்டமாக உள்ளது. இதனால் இந்திய குடும்பங்களின் சேமிப்பு அடுத்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் மொத்த சேமிப்பில் 35 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2009–10–நிதி ஆண்டில் குடும்பங்களின் சேமிப்பு 26 சதவீத அளவிற்கே இருந்தது.

‘‘ஆயுள் காப்பீட்டு துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 12 முதல் 15 சதவீத வளர்ச்சி காணும். தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆயுள் காப்பீட்டு பிரிமிய தொகை 3.2 சதவீதமாக உள்ளது. இது 2020–ஆம் ஆண்டில் 5 சதவீதமாக உயரும். இன்றைய நிலையில் ஆயுள் காப்பீட்டு துறையின் பிரிமிய வருவாய் ரூ.2.80 லட்சம் கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடி வரை இருக்கலாம்’’ என்று மாணிக்கம் கூறினார்.

அன்னிய நேரடி முதலீடு

ஆயுள் காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. அவ்வாறு வரம்பு உயர்த்தப்படும்போது இத்துறையில் 1,000 கோடி டாலர் அளவிற்கு அன்னிய செலாவணி கிடைக்கும் என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read