.
சற்று முன் :
நரேந்திரமோடி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் ‘திடீர்’ சோதனை
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கததா அணி டாஸ் வென்று பேட்டிங்க் தேர்வு
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சடலமாக மீட்பு
சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிப்பு
ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி பதவியில் நீடிக்க சுந்தர்ராமனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு முடியும் வரையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ. தலைவராக முடியாது சுப்ரீம் கோர்ட்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி நைனிடாலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

Advertisement

ம.பொ.சி. 18–ம் ஆண்டு நினைவு விழா பழ.நெடுமாறன், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சென்னை,

ம.பொ.சி.யின் 18–ம் ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

ம.பொ.சி. விருது

சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. அறக்கட்டளை மற்றும் ம.பொ.சி. பதிப்பகம் சார்பில், சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 18–வது ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டல் சவேராவில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.விழாவில், சிலப்பதிகார இணையதளத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கிவைத்தார். வாழ்நாள் சாதனை விருதான ம.பொ.சி. விருதுகளை, ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் மற்றும் கவிஞர் தாமரைச்செல்வன் ஆகியோருக்கு பழ.நெடுமாறன் வழங்கினார்.

புத்தக வெளியீடு

மேலும் ம.பொ.சி. எழுதிய ‘மாதவியின் மாண்பு’ என்ற புத்தகத்தை தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் பெற்றுக்கொண்டார்.விழாவில் பழ.நெடுமாறன் பேசும்போது, தமிழர்களுக்காக தியாக வாழ்க்கை வாழ்ந்த ம.பொ.சி.யை மனதில் நினைத்து, சகோதர தமிழர்களுக்காக ஒன்றுபட்டு போராடினால் வெற்றி காண முடியும் என்றார்.

தமிழர்கள் நடத்தும்...

வைகோ பேசும்போது, தமிழகத்தில் ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று பேரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டதாக தமிழ் இலக்கியத்திலேயே ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது. இது வரலாறு. சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள், மூவேந்தர்களையும், சமயங்களையும் ஒன்றாக வைத்து எழுதி உள்ளார் என்றார்.பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தமிழை பரப்ப வேண்டும். அவர்களுக்கு தமிழ் பேசத் தெரிகிறது, எழுத தெரியவில்லை. ம.பொ.சி.க்காக நடத்தப்படும் விழாவை அரசு நடத்துவதாக இருந்தால் அது சடங்கு. அது தமிழர்கள் நடத்தும் விழாவாக இருக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவுக்கு கோரிக்கை

விழாவில் மாதவி பாஸ்கரன் பேசும்போது, கன்னியாகுமரியில் ம.பொ.சி.க்கு முழு உருவ சிலை வைக்க வேண்டும் என்றும், சென்னையில் மணி மண்டபம் அமைத்து ம.பொ.சி.யின் அரிய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை காட்சிக்கு வைக்க வேண்டும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.விழாவில் ம.பொ.சிவஞானத்தின் மகள் மாதவி பாஸ்கரன், க.பி.பாஸ்கரன், எழுத்தாளர் வாசுகி கண்ணப்பன், டாக்டர் ராஜேஸ்வரி மங்கள குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

image: 

category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read