.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

மெக்சிகோ நாட்டில் நில சரிவுக்கு 101 பேர் பலி

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அங்கு ஆங்காங்கே பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவுகளின்போது இடிபாடுகளில் சிக்கி 101 பேர் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.மேலும் 68 பேர் காணாமல் போய்விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அகாபுல்கோ பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் ஏறத்தாழ ஒரு வாரமாக சிக்கி தவிக்கின்றனர். பனி மூட்டம் காணப்படுவதால் அவர்களை விமானங்கள், ஹெலிகாப்டர்களில் மீட்கும் பணி முடங்கி உள்ளது.இது பற்றி மெக்சிகோ உள்துறை மந்திரி ஏஞ்சல் அசாரியோ கூறுகையில், Ò நிலச்சரிவில் சிக்கி 100&க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். வானிலை மோசமாக உள்ளதால் மீட்புப்பணிகள் தாமதித்து உள்ளன. இது எங்களுக்கு கவலை அளிக்கிறதுÓ என்றார்.
 

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read