.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

முசாபர்நகர் வன்முறைக்கு சிறிய அளவிலான மக்கள் குழுவே காரணம் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/muzaffarnagar.jpgபுதுடெல்லி,

முசாபர்நகர் வன்முறை சம்பவம் வருத்தத்திற்குரியது. ஒரு சிறிய அளவிலான மக்கள் குழுவே இதற்கு காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

நல்லிணக்க விருது

டெல்லியில் நடந்த தேசிய மத நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசும்போது, சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்தார். விழாவில் அவர் பேசியதாவது:–

நாட்டின் சில பகுதிகளில் மதரீதியான பதற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விழா இங்கு நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தப்படக்கூடியது. இது நமது சமுதாயத்திலும், அரசியலிலும் நல்லெண்ணத்தையும், நட்புறவையும் ஊக்கப்படுத்த நாம் அனைவரும் நமது தனித்துவம், ஒழுக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்க தூண்டுவதாக அமைகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியா நூற்றாண்டு காலமாக பல்வேறு மதங்கள் ஒன்றாக பூத்துக்குலுங்கும் நாடு. ஒருவொருக்கு ஒருவர் வளப்படுத்திக்கொள்வதுடன் அந்த சமயங்களை சேர்ந்த மக்கள் ஒன்றாக சேர்ந்து மதசார்பற்ற தன்மையை காட்டி வருகிறது. ஒரு சிறிய குழுவை சேர்ந்த மக்கள் தான் நம்மிடையே பிரிவினையை உருவாக்குவதாக நான் நம்புகிறேன்.

இதுபோன்ற சக்திகளை தடுக்கும் உளப்பூர்வமான கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவும் நான் கருதுகிறேன். நமது நாடு மிகப்பெரிய வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. மற்றவர்களின் மதங்களுக்கும் மரியாதை கொடுப்பதும், பொறுமை என்ற மிகவும் பெருமைக்குரிய சொத்தும் நம்மிடம் உள்ளது.

தேசிய ஒருங்கிணைப்புக்குழு

நமது நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொறுப்புகளை மீண்டும் உறுதி செய்வதற்காக நான் இந்த சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகளை ஆராய்வதற்காக அரசு 23–ந்தேதி தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுகிறது.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

விருது பெற்றோர்

2011–ம் ஆண்டுக்கான தேசிய மத நல்லிணக்க விருது மிசோராம் மாநிலத்தை சேர்ந்த கம்லியானா, ஒடிசாவை சேர்ந்த முகமது அப்துல் பாரி ஆகியோருக்கும், 2012–ம் ஆண்டுக்கான சிறந்த நிறுவனத்துக்கான விருது டெல்லியில் உள்ள தேச ஒற்றுமை மற்றும் நட்புறவு அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டது.

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read