ஐபிஎல் 2017 ஏலம்: முன்னணி வீரர்களை விட அதிக விலைக்கு எடுக்கப்படும் இளம் வீரர்கள்


ஐபிஎல் 2017 ஏலம்: முன்னணி வீரர்களை விட அதிக விலைக்கு எடுக்கப்படும் இளம் வீரர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2017 9:40 AM GMT (Updated: 20 Feb 2017 9:52 AM GMT)

ஐபிஎல் 2017 ஏலம் கேட்பில், முன்னணி வீரர்களைவிட, இளம் வீரர்களுக்கே அதிக வரவேற்பு காணப்படுகிறது.

பெங்களூர்

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந்தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர்.

அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பென் ஸ்டோக்ஸ், போல்ட், கமின்ஸ், நடராஜன் உள்ளிட்ட 33 வீரர்களின் ஒட்டுமொத்த ஏல விலை ரூ.76.75 கோடியாகும்.மதிய உணவு இடைவேளை வரையும் 108 வீரர்கள் விலை போயுள்ளனர்.

* அங்கித் சவுத்திரி ரூ. 10 லட்சத்தில் துவங்கி, பெங்களூரூ அணிக்கு ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

* ஆப்கானிஸ்தான் வீரர் முஹமது நபி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்கும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார்.

* இர்பான் பதான், மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர்! ஆகியொர் விலை போகவில்லை.

* சேலத்தை சேர்ந்த டி. நடராஜன், ரூ. 10 லட்சத்தில் துவங்கி ரூ. 3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

* நாத் சிங் குஜராத் அணி ரூ. 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

* தமிழக வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத் இந்திய அணியின் புஜாரா வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்,இம்ரான் தாஹிர், பிராட் ஹாக் ,ஓஜா,ஜம்மு வீரர் ரசூல் ஆகியோர் ஏலத்தில் விலை போகவில்லை.

* பிரவீண் தாம்பே ரூ. 10 லட்சத்துக்கு  சன் ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

* ஆப்கானிஸ்தான் வீரர் ரசித் கான் ரூ. 4 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

* நாத் சிங் குஜராத் அணி ரூ. 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

* தமிழகத்தின் முருகன் அஷ்வின் ரூ. 1 கோடிக்கு டில்லி அணி ஏலத்தில் எடுத்தது.

* கரண் சர்மா ரூ. 3.20 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

* ஜெய்தேவ் உனக்தத்தை ரூ.30 லட்சத்துக்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது.

* ரிஷி தவான் ரூ. 55 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

* நியூசிலாந்து ஆல் ரவுண்டர் டிரன்ட் போல்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கா ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

* டேரன் சமியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

டேன் கிறிஸ்டியனை புனே அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது.

*
முகமது சிராஜை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
 
* நாதன் கூல்டர் நைல்லை கொல்கத்தா அணி, ரூ. 3.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது


அத்துடன், இன்றைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்களில் பலர் புதுமுக வீரர்கள் ஆவர். முன்னணி வீரர்களைவிட, இளம் வீரர்களுக்கே அதிக வரவேற்பு காணப்படுவதாகவும், இன்று மாலை இறுதி நிலவரம் தெரியவரும் எனவும் ஐபிஎல் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story