4-வது டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு


4-வது டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 25 March 2017 3:54 AM GMT (Updated: 25 March 2017 3:54 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தர்மசாலா,

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடந்த 3–வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து இந்த தொடர் தற்போது 1–1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று தொடங்கியது. தோள்பட்டை காயம் குணம் ஆகாததால் விராட் கோலி போட்டியில் இருந்து விலகினார். விராட் கோலிக்கு பதிலாக ரகானே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு நிறைந்த இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது. இந்திய அணியில் அறிமுக வீரராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story