சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 15 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 15 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு
x
தினத்தந்தி 26 April 2017 9:31 AM GMT (Updated: 26 April 2017 9:30 AM GMT)

சாம்பியன்ஸ் டிராபி வர்ணனையாளர்கள் 15 பேர் கொண்ட பட்டியலை ஐ.சி.சி.வெளியிட்டு உள்ளது.


டாப்–8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கபடவில்லை.பாகிஸ்தான், இங்கிலாந்து தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களை அறிவித்து விட்டது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சில வர்ணனையாளர்களைத் தேர்ந்தெடுத்து, `இவர்கள்தான் அந்தத் தொடர் முழுவதும் வர்ணனை செய்வார்கள்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது ஐசிசி.கீழ்கண்ட  15 பேர்கொண்ட குழுதான் 17 நாள்கள் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான தொடரில் வர்ணனை செய்ய இருக்கிறது

இந்தியாவிலிருந்து சவுரவ் கங்குலி,சஞ்சய் மஞ்சுரேக்கர்
ஆஸ்திரேலியாவிலிருந்து ரிக்கிபான்டிங், ஷேன்வார்ன், மைக்கேல் ஸ்லேட்டர்
நியூசிலாந்திலிருந்து பிரெண்டன் மெக்கல்லம், சைமன் டவுல்
தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஷான்போலக், க்ரீம்ஸ்மித்.
இங்கிலாந்திலிருந்து நாசிர் ஹுசேன், மைக்கேல் அதர்டன்,
இலங்கையிலிருந்து குமார் சங்ககரா,
பாகிஸ்தானிலிருந்து ரமீஸ் ராஜா.
மேற்கிந்திய அணியிலிருந்து இயான் பிஷப்.
வங்கதேசத்திலிருந்து அத்தர் அலி கான். .

இந்த 15 பேரில் பான்டிங், சங்ககரா, மெக்கல்லம் ஆகிய மூவரும் முதன்முறையாக வர்ணனை செய்பவர்கள்.

Next Story