அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதா, கழற்றிவிடப்பட்டாரா ஹர்பஜன் சிங் ஆத்திரம்


அஸ்வினுக்கு  ஓய்வு கொடுக்கப்பட்டதா, கழற்றிவிடப்பட்டாரா ஹர்பஜன் சிங் ஆத்திரம்
x
தினத்தந்தி 22 Aug 2017 5:38 AM GMT (Updated: 22 Aug 2017 5:38 AM GMT)

அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதா அல்லது கழற்றிவிடப்பட்டாரா என ஹர்பஜன் சிங் ஆத்திரம் அடைந்துள்ளார்

அஸ்வினுக்கு ஓய்வு கொடுத்தது குறித்து  ஹர்பஜன் ஆத்திரம்

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடருக்கு இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் யுவராஜ் சிங் போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதா இல்லை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டாரா என்பதை தெளிவுபடுத்துங்கள் எனவும் தனக்கு ஒன்றும் புரியவில்லை.

அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரைப் பார்த்தால் ஓய்வு அளிக்கப்பட்டது போல் தெரியவில்லை.

இங்கிலாந்து சென்று கவுன்ட்டி கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார். இது என்ன மாதிரியான ஓய்வு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story