மாவட்ட செய்திகள்

மடை கருப்பசாமி கோவிலில் 350 ஆடுகள் பலியிட்டு வழிபாடு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம் + "||" + 350 goats sacrificed in the temple worship only involved men Jasbir sluice weird

மடை கருப்பசாமி கோவிலில் 350 ஆடுகள் பலியிட்டு வழிபாடு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம்

மடை கருப்பசாமி கோவிலில் 350 ஆடுகள் பலியிட்டு வழிபாடு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம்
சிவகங்கை அருகே மடை கருப்பசாமி கோவிலில் 350 ஆடுகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. மடை கருப்பசாமி கோவில் சிவகங்கையை அடுத்த திருமலையில் புகழ்பெற்ற மலைகொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்

சிவகங்கை அருகே மடை கருப்பசாமி கோவிலில் 350 ஆடுகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

மடை கருப்பசாமி கோவில்

சிவகங்கையை அடுத்த திருமலையில் புகழ்பெற்ற மலைகொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மேற்கே ஊர்காவல் தெய்வமான மடைகருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிராமமக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பி, அதற்கு காணிக்கையாக அரிவாள், மணி, ஆடு, சேவல் ஆகியவைகளை வழங்குகின்றனர்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு முன்னதாக கிடாய் (ஆடு) வெட்டி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு பெண்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். விழாவில் சுற்றுபகுதி கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

350 ஆடுகள்

இந்தாண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி கிராமத்து ஆடு, நேர்த்திக்கடன் ஆடுகள் உள்பட 350 கறுப்பு ஆடுகளை பூசாரி வீட்டில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்பு கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்து நோத்திகடன் ஆடுகளை வெட்டினர். தொடர்ந்து கறி சமையல் செய்து, அதை படையல் படைத்து வழிபாடு செய்தனர். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இரவில் ஆண்களுக்கு மட்டும் கறிசோறு விருந்து வழங்கப்பட்டது.

இது தொடர்பாக திருமலை ஊராட்சி மன்ற தலைவி கண்ணகியின் கணவர் கண்ணன் கூறியதாவது:– இந்த விழா சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்பட்டுள்ள களவு, ஏமாற்றம், பாதிப்புகள் ஆகியவைகள் குறித்து, இந்த கோவிலில் வந்து பிரார்த்தனை செய்வார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்கு முன்பாக இந்த வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் 5ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.