மாவட்ட செய்திகள்

மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை + "||" + Mariamman Temple Dargah mulaippari Yervadi prayer ceremony

மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை

மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை
மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி யாதவர்தெருவில் அமைந்துள்ள வாழவந்தான் மாரியம்மன்கோவில் முளைப்பாரி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தலைவர் முத்துமணி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் வடமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் ஏர்வாடி தர்காவை வந்தடைந்தது. பின்னர் 3 முறை முளைப்பாரி ஊர்வலம் தர்காவை சுற்றி வந்தது. அதன்பின்னர் தர்காவில் முளைப்பாரி வைக்கப்பட்டு மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செய்யது இஸ்மாயில் ஆலிம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் தர்கா கமிட்டி நிர்வாகி துல்கருணை பாட்சா லெவ்வை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏர்வாடி கடற்கரையில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.