திருவள்ளுவர் தினத்தன்று உலகப்பொதுமறை கொடி அறிமுகம்


திருவள்ளுவர் தினத்தன்று உலகப்பொதுமறை கொடி அறிமுகம்
x
தினத்தந்தி 16 Jan 2017 10:30 PM GMT (Updated: 16 Jan 2017 9:40 PM GMT)

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளுவர்) ஆகியவை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை

சென்னை

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளுவர்) ஆகியவை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பின்புறம் உலகப் பொதுமறை கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த கொடியில் உலக உருண்டையின் மீது திருவள்ளுவர் அமர்ந்திருப்பதுபோல உள்ளது. அதன் கீழே உலகப்பொதுமறை என்று எழுதப்பட்டுள்ளது. உலகப்பொதுமறை கொடி அறிமுக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதையடுத்து கண்ணகி சிலையில் இருந்து உலகப்பொதுமறை கொடி, திருவள்ளுவர் சிலை வரையிலும் பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டது. பேரணியின் முன்பு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பறை இசையும், சிறுவர்-சிறுமிகள் சிலம்பம் அடித்தப் படியும் சென்றனர்.

இதுகுறித்து தமிழர் பண்பாட்டு நடுவத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், “திருக்குறளை உலகப்பொதுமறை ஆக்கவேண்டும், திருவள்ளுவர் நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும், பாராளுமன்றத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கொடியை அறிமுகம் செய்துள்ளோம்” என்றனர். 

Next Story