சென்னையில் மே 17 இயக்கம் முற்றுகை போராட்டம் 70 பேர் கைது


சென்னையில் மே 17 இயக்கம் முற்றுகை போராட்டம் 70 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2017 10:45 PM GMT (Updated: 20 March 2017 8:03 PM GMT)

இலங்கையில் தமிழர்கள் ஏராளமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். இலங்கை அரசின் இந்த இனப்படுகொலையை விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கவேண்டும்,

சென்னை,

தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு தமிழீழ விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து மே 17 இயக்கத்தினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், இங்கிலாந்து தூதரகம், இலங்கை தூதரகம் ஆகியவற்றின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த சென்னை எழும்பூரில் உள்ள ராஜ ரத்தினம் ஸ்டேடியம் முன்பு கூடினார்கள். அவர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்,
மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீண்குமார், தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன் உள்பட மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

Next Story