பட்டாபிராம் அருகே ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


பட்டாபிராம் அருகே ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 March 2017 10:15 PM GMT (Updated: 22 March 2017 8:13 PM GMT)

பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி பகுதியில் உள்ள ஈசா ஏரி, சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

ஆவடி,

சோராஞ்சேரி, அணைக்கட்டு சேரி, ஆயில்சேரி, சத்யா நகர், ஜெ.ஜெ.நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ஏரி குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த ஏரி தண்ணீரை கொண்டு சுமார் 400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த ஏரியின் ஒரு பகுதி தனியார் நிறுவனம் சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிட இடிபாடுகளை கொட்டி நிரப்பி வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் விவசாயத்தை நம்பி இருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் ஏரியில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஏரி ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறி ஏரியின் அருகே சாமியானா பந்தல் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

--–

படம் உண்டு

=–=–=

பிட்–சென்னை மட்டும்


Next Story