நீர் விதைகள்..!


நீர் விதைகள்..!
x
தினத்தந்தி 23 March 2017 10:30 PM GMT (Updated: 23 March 2017 10:02 AM GMT)

பொட்டாசியம் தனிம அடிப்படையில் தயாராகி இருக்கும் நீர் விதைகள், தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன. இதனை விதைகளுடன் சேர்த்து விதைக்கும் போது, அவை தாவரங்களுக்கு ஈரப்பதத்தை வழங்குகின்றன.

றண்ட நிலங்கள் அதிகமாக இருக்கும் மெக்ஸிகோவில், புதுமையான முறையில் விவசாயம் செய்கிறார்கள். ‘நீர் விதைகள்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வறட்சியையும், நீர் பற்றாக்குறையையும் சமாளித்துக் கொள்கிறார்கள்.

பொட்டாசியம் தனிம அடிப்படையில் தயாராகி இருக்கும் நீர் விதைகள், தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன. இதனை விதைகளுடன் சேர்த்து விதைக்கும் போது, அவை தாவரங்களுக்கு ஈரப்பதத்தை வழங்குகின்றன. 8 வருடங்கள் வரை நீர் விதைகள் தாக்குபிடிக்கும் என்பதால், இதை மெக்ஸிகோ விவசாயிகள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இவை மழைநீரை சேகரித்து, அதைச் செடிகளுக்கு தேவையான நீர் ஆதாரமாக மாற்றுகின்றன. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் தண்ணீரை சேமிப்பதுடன், தண்ணீரை பாய்ச்சும் மின்சார செலவும் குறைவதாக மெக்ஸிகோ விவசாயிகள் சந்தோ‌ஷப்படுகிறார்கள்.

Next Story