வங்கிகளில் வேலைவாய்ப்புகள்


வங்கிகளில் வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 27 March 2017 2:00 PM GMT (Updated: 27 March 2017 8:07 AM GMT)

ஆந்திரா வங்கி மற்றும் சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திரா வங்கி :

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கியில், பல்வேறு கிளைகளில் உதவி அலுவலர் (சப் ஸ்டாப்) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கோவையில் 13 பணியிடங்கள் உள்பட மொத்தம் 81 பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. குஜராத், கொல்கத்தா, தெலங்கானா, மீரட், போபால், ஹூப்ளி, புவனேஸ்வர், லக்னோ, புனே போன்ற இடங்களில் பணிகள் உள்ளன.
இந்த பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி பெற்றிருப்பதுடன், அந்தந்த பகுதி மொழியில் அடிப்படை எழுத்து மற்றும் பேச்சாற்றல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கில அறிவும் அவசியம். பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் 31-3-2017 முதல், 4-4-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு கிளைக்கும் விண்ணப்பம் சென்றடையும் தேதி மாறுபடுகிறது. கோவை பணிகளுக்கு 1-4-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை
www.andrabank.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சவுத் இந்தியன் வங்கி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் புரபெசனரி அதிகாரி தரத்திலான ஐ.டி. ஆபீசர்-(ஸ்கேல் 1), ஐ.டி. புராஜெக்ட் மேனேஜர் (ஸ்கேல் 2,3) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பி.இ., பி.டெக் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், எம்.சி.ஏ, எம்.எஸ்சி., ஐ.டி, எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் www.southindianbank.com இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-3-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கவும்.


Next Story