தண்டையார்பேட்டையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் 50 பேர் கைது


தண்டையார்பேட்டையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் 50 பேர் கைது
x
தினத்தந்தி 24 April 2017 8:45 PM GMT (Updated: 24 April 2017 7:09 PM GMT)

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று காலை தே.மு.தி.க.வினர் 300–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.

ராயபுரம்,

சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை சேனியம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையால், தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கும், இரவு நேரங்களில் பெண்கள் தனியாக நடமாட முடியாத நிலையும் உள்ளது.

இதனால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று காலை தே.மு.தி.க.வினர் 300–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு தள்ளு–முள்ளுவும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

Next Story