பட்டினப்பாக்கம் கடற்கரையில் ரூ.17 கோடி செலவில் சாலை வசதி மீன் வியாபாரத்திற்கு தனி இடம் ஒதுக்கீடு


பட்டினப்பாக்கம் கடற்கரையில் ரூ.17 கோடி செலவில் சாலை வசதி மீன் வியாபாரத்திற்கு தனி இடம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 23 Jun 2017 9:34 PM GMT (Updated: 23 Jun 2017 9:34 PM GMT)

சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் வரை கடற்கரை பகுதியில் ரூ.17 கோடி செலவில் தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் வரை கடற்கரை பகுதியில் ரூ.17 கோடி செலவில் தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலையின் இரு பகுதியிலும் பொது மக்கள் உட்கார்ந்து மீன் வியாபாரம் செய்கிறார்கள்.

இதனால் அந்த சாலையை வாகனங்கள் செல்ல முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. அங்கு மீன் வியாபாரம் செய்யும் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரமாக இருப்பதால் மீன் வியாபாரத்தை கைவிட முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே பொதுமக்கள் மீன் வியாபாரம் செய்வதற்கு அதே பகுதியில் தனி மீன் மார்க்கெட் அமைத்து கொடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்திடவும், புதிதாக போடப்பட்டுள்ள சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உயர் அதிகாரிகளோடு சென்று அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். மீன் மார்க்கெட் அமைக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டனர். 

Next Story