நபார்டு வங்கியில் அதிகாரி பணிகள்


நபார்டு வங்கியில் அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 26 Jun 2017 7:07 AM GMT (Updated: 26 Jun 2017 7:07 AM GMT)

நபார்டு வங்கியில் அதிகாரி பணிக்கு 108 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக ‘நபார்டு’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பல்வேறு பிரிவுகளில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பணிக்கு 91 பேரும், மற்றொரு அறிவிப்பின்படி மேலாளர் பணிக்கு 17 பேரும் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

உதவி மேலாளர் பணி விண்ணப்பதாரர்கள் 1-6-2017 தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-6-1987 மற்றும் 1-6-1996 ஆகிய தேதிகளுக்கு உட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி உள்ள பிரிவுகளில் இளநிலை - முதுநிலை படிப்பு படித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். பொருளாதாரம், வேளாண்மை பொருளாதாரம், வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது புகைப்படம் மற்றும் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10-7-2017-ந் தேதியாகும்.

மேலாளர் பணிகள்

மற்றொரு அறிவிப்பின்படி மேலாளர் (கிரேடு-பி) பணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 1-6-2017 தேதியில் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-7-2017-ந் தேதியாகும்.

இவை பற்றிய விரிவான விவரங்களை www.nabard.org என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Next Story