மயிலாப்பூர் பகுதியில் 3 பெண்களிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் உருவம் கேமராவில் பதிவு


மயிலாப்பூர் பகுதியில் 3 பெண்களிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் உருவம் கேமராவில் பதிவு
x
தினத்தந்தி 24 July 2017 4:00 AM GMT (Updated: 23 July 2017 8:24 PM GMT)

மயிலாப்பூர் பகுதியில் 3 பெண்களிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் உருவம் கேமராவில் பதிவு துப்புக்கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் அறிவிப்பு

சென்னை,

சென்னை மயிலாப்பூர் பகுதியில் 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த படத்தை வெளியிட்ட போலீசார், கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்தால் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை ஆகிய இடங்களில் நேற்றுமுன்தினம் 3 பெண்களிடம் தொடர்ச்சியாக சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன. மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

அவர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கொள்ளை ஆசாமி ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் உட்கார்ந்து பெண்களிடம் சங்கிலி பறித்த ஆசாமியின் உருவம் தெளிவாக கேமராவில் பதிவாகி உள்ளது.

கேமராவில் பதிவான கொள்ளையர்கள் படத்தை போலீசார் நேற்று வெளியிட்டனர். அந்த கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் பற்றி சரியான துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் உத்தரவின்பேரில் இணை கமி‌ஷனர் மனோகரன் மேற்பார்வையில் துணை கமி‌ஷனர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


Next Story