கப்பல்தளத்தில் 198 பணியிடங்கள்


கப்பல்தளத்தில் 198 பணியிடங்கள்
x
தினத்தந்தி 24 July 2017 9:13 AM GMT (Updated: 24 July 2017 9:13 AM GMT)

கப்பல்தளத்தில் 198 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கேரளமாநிலம் கொச்சியில் செயல்படும் பொதுத்துறை கப்பல் நிறுவனம் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட். கப்பல்கட்டும் நிறுவனமான இதில் தற்போது பேப்ரிகேசன் அசிஸ்டன்ட் மற்றும் அவுட் பிட் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 198 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் வெல்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், பிட்டர், மோட்டார் மெக்கானிக், பைப் பிட்டர், டீசல் மெக்கானிக், பெயிண்டர், மெஷினிஸ்ட், ரிகர் போன்ற பணிகள் உள்ளன. பணி வாரியான காலியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

30-7-2017-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள், 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன.

தேர்வு செய்யும் முறை:

செய்முறைத் தேர்வில் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்த கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-7-2017-ந் தேதியாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரையும், விண்ணப்ப பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும். நகல் விண்ணப்பம் 7-8-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.cochinshipyard.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

Next Story