1102 ஆராய்ச்சி உதவியாளர் வேலை


1102 ஆராய்ச்சி உதவியாளர் வேலை
x
தினத்தந்தி 24 July 2017 10:13 AM GMT (Updated: 24 July 2017 10:13 AM GMT)

இந்திய வானியல் ஆராய்ச்சி துறையில் 1102 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான எஸ்.எஸ்.சி. அமைப்பு, இந்திய வானியல் துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இவை ‘குரூப்-பி‘ பிரிவில் வரும் நான்-ஹெசட்டடு அதிகாரி தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 1102 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 4-8-2017 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

இயற்பியல் பாடத்தை உள்ளடக்கிய அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் படித்தவர்களும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். இவர்கள் பிளஸ்-2 வரை இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

தேர்வுசெய்யும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பார்ட்-1, பார்ட்-2 என இரு படிவங்களாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 4-8-2017-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 20-11-2017 முதல் 27-11-2017 வரை நடை பெறும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssconlie.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம். 

Next Story