எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 315 பணிகள்


எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 315 பணிகள்
x
தினத்தந்தி 24 July 2017 10:20 AM GMT (Updated: 24 July 2017 10:19 AM GMT)

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு 315 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. புதுடெல்லியை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மைய கிளைகள் செயல்படுகின்றன. தற்போது ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் கிளையில் ஸ்டாப் நர்ஸ் மற்றும் டெக்னிகல் அசிஸ்டன்ட், ஹாஸ்பிடல் அட்டன்ட், ஸ்டோர்கீப்பர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 315 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 125 இடங்களும், ஹாஸ்பிடல் அட்டண்ட் பணிக்கு 100 இடங்களும் உள்ளன. ஸ்டோர்கீப்பர், ஆபீஸ்அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

ஸ்டாப் நர்ஸ், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்க முடியும். அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் விதிவிலக்கு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

கல்வித்தகுதி:

பி.எஸ்சி. நர்சிங் 4 வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் ஸ்டாப் நர்ஸ் பணிக்கும், பி.எஸ்சி. லேப்டெக்னீசியன் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், மருத்துவமனை சேவை பணிகளில் அனுபவம் உள்ளவர்கள் அட்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.1000 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-9-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால பயன்பாட்டிற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story