உலகின் ‘தர்மப்பிரபு’ நாடுகள்


உலகின் ‘தர்மப்பிரபு’ நாடுகள்
x
தினத்தந்தி 19 Aug 2017 11:30 AM GMT (Updated: 19 Aug 2017 8:45 AM GMT)

தயாள சிந்தனை உள்ள தனிமனிதர்களைப் போல, பிற நாடுகளுக்கு நிதியுதவியை வாரி வழங்கும் நாடுகளும் இருக்கின்றன.

யாள சிந்தனை உள்ள தனிமனிதர்களைப் போல, பிற நாடுகளுக்கு நிதியுதவியை வாரி வழங்கும் நாடுகளும் இருக்கின்றன.

அப்படி, சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளின் வளர்ச்சிக்காக நிதியுதவியை வாரி வழங்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

பணக்கார நாடுகள் தங்களது ஒட்டுமொத்த உற்பத்தியில் 0.7 சதவீத நிதியுதியை வெளிநாடுகளுக்கு அளிக்க முன்வந்திருக்கின்றன.

இந்த விகிதாச்சாரம், நிதியளிக்கும் பணக்கார நாடுகளின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி வருகிறது.

வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் நிதியுதவி அளிப்பதற்கு பல மறைமுக காரணங்களும் உள்ளன.

குறிப்பாக, ஒரு வளரும் நாட்டுக்கு ஒரு பணக்கார நாடு நிதியுதவி அளிக்கும்போது இரு நாடுகளுக்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒப்பந்தம் போடப்படும்.

அதாவது, நிதியுதவியைப் பெற்ற நாடு, தமக்குத் தேவையான முக்கியப் பொருட்களை நிதியுதவியை வழங்கிய நாட்டிடம் இறக்குமதி செய்ய வேண்டும்.

அதன் மூலம், நிதியுதவி அளித்த நாட்டின் உற்பத்திப் பொருட்கள் எளிதில் விற்பனை ஆவதுடன், அந்நாட்டின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இரண்டாவதாக, நிதியுதவி அளித்த நாட்டுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படும் நேரத்தில், நிதியுதவி பெற்ற நாடு அந்த நாட்டுக்கு ஆதரவு அளிக்கும்.

மூன்றாவதாக, வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அந்தப் பணக்கார நாட்டின் செல்வாக்கும் மதிப்பும் பிற நாடுகள் மத்தியில் உயரும்.

இவ்வாறு நிதியுதவி அளிக்கும் நாட்டுக்கு உலகளவில் பெயரும் புகழும் கிடைப்பதுடன், இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

கொடை வள்ளல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், நெதர்லாந்து, நார்வே, கனடா, ஐக்கிய அமீரகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2014-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா 30 பில்லியன் டாலரும், ஜெர்மனி 20 பில்லியன் டாலரும் நிதியுதவியாக வெளிநாடுகளுக்கு அளித்துள்ளன.

Next Story