சென்னையில் டெங்கு: பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனிப்பிரிவு


சென்னையில் டெங்கு: பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனிப்பிரிவு
x
தினத்தந்தி 19 Aug 2017 11:00 PM GMT (Updated: 19 Aug 2017 7:37 PM GMT)

சென்னையில் உள்ள பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனியாக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வகை காய்ச்சல்கள் பரவுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை தீவிர ஏற்பாடுளைச் செய்து வருகிறது. அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்பதையும், கையிருப்பில் அனைத்து வகை மருந்துகளும் உள்ளன என்பதையும் உறுதி செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனியாக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் ஒரே நேரத்தில் 28 பேர் உள்நோயாளியாகத் தங்க முடியும். இந்தத் தனி வார்டுக்கு சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்றிரவு திடீரெனச் சென்று ஆய்வு நடத்தினார்.

பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், சிகிச்சை முறை தொடர்பாக கேட்டறிந்தார். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை பற்றி விசாரித்தார். டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் திடீரென்று சென்று டாக்டர்களையும் செவிலியர்களையும் உற்சாகப்படுத்தியதும், நோயாளிகளிடம் பரிவாக உடல்நிலை பற்றி கேட்டதும், அங்கிருந்தவர்களுக்கு மனநிறைவை அளித்தது. 

Next Story