பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.. பிரசவமும் பார்த்தார்..!


பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.. பிரசவமும் பார்த்தார்..!
x
தினத்தந்தி 20 Aug 2017 11:30 AM GMT (Updated: 20 Aug 2017 8:44 AM GMT)

அமெரிக்காவின் கென்டக்கி நகர் பகுதியை சேர்ந்தவர், அமெண்டா ஹெஸ். மகப்பேறு மருத்துவரான இவர் கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மெரிக்காவின் கென்டக்கி நகர் பகுதியை சேர்ந்தவர், அமெண்டா ஹெஸ். மகப்பேறு மருத்துவரான இவர் கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அமெண்டாவிற்கு பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த சமயத்தில் பக்கத்து அறையில் இருந்து பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஹேலிடே என்ற பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டது. பிரசவ வேதனையில் அந்த பெண் துடிதுடித்து கொண்டிருந்தார். அந்த சத்தத்தை கேட்டதும் அமெண்டா கலங்கி போனார். உடனே படுக்கையில் இருந்து எழுந்து அந்த பெண்ணின் அறைக்கு சென்றார். அங்கு பார்த்த காட்சி அவரை உலுக்கியது. பிரசவ வேதனையில் கதறிய அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு மிகவும் சிக்கலானதாக இருந்தது. குழந்தையின் கழுத்தை சுற்றி தொப்புள் கொடி படர்ந்திருந் திருக்கிறது.

அங்கிருந்தவர்கள் எப்படி பிரசவம் பார்ப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மூத்த டாக்டரின் உதவியை நாடி இருக்கிறார்கள். ஆனால் டாக்டரோ அந்த சமயத்தில் மருத்துவமனையில் இல்லை. அதை பார்த்த அமெண்டா, தான் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். உடனே துரிதமாக செயல்பட்டு தான் பிரசவ வேதனையில் இருந்த போதிலும் அந்த பெண் ணுக்கு பிரசவம் பார்த்தார். குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடி சூழ்ந்திருந்ததால் பிரசவம் சவாலானதாக இருந்திருக்கிறது. எனினும் அமெண்டா சாதுரியமாக செயல்பட்டு தாய்க்கும், சேய்க்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பிரசவத்தை சுமுகமாக்கி விட்டார்.

“பிரசவத்தில் துடித்த பெண்ணை பார்த்ததும் ஆரம்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தேன். பின்னர் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப என்னை தயார்படுத்திக்கொண்டேன். என்னுடைய உதவி கட்டாய தேவையாக இருந்ததால், பிரசவம் பார்த்தேன்” என்கிறார்.

ஹேலிடேவுக்கு பிரசவம் பார்த்த அதே நாள் இரவிலேயே அமெண்டாவும் பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்.

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலை யிலும் தனக்கு ஒரு டாக்டர் பிரசவம் பார்த்திருக்கிறார் என்பதை அறிந்ததும் ஹேலிடே நெகிழ்ந்து போனார்.

“யாராவது உதவி செய்வார்களா? என்று கலங்கி கொண்டிருந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவி செய்த அந்த மருத்துவர் பெருமைக்குரியவர்” என்கிறார், ஹேலிடே. 

Next Story