அம்பத்தூரில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி விற்றவர் கைது


அம்பத்தூரில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி விற்றவர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2017 11:30 PM GMT (Updated: 21 Aug 2017 6:55 PM GMT)

அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

சென்னை அடுத்த அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் அன்புநாயகம் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவர் தனது வீட்டில் பீடி, சிகரெட், சிப்ஸ் போன்றவற்றை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தார். இந்தநிலையில் இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அம்பத்தூர் போலீஸ் துணை கமி‌ஷனர் சர்வேஸ்ராஜ் உத்தரவின்பேரில் அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி மற்றும் போலீசார் நேற்று காலை சீனிவாசன் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.

கைது

அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 12 மூட்டை குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சீனிவாசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புகையிலை பொருட்களை சென்னை மற்றும் கோயம்பேட்டில் இருந்து வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அம்பத்தூர், கள்ளிகுப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சீனிவாசனை கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story