போலீஸ்காரர் மீது தாக்குதல் கூலித்தொழிலாளி கைது; 2 பேர் தப்பி ஓட்டம்


போலீஸ்காரர் மீது தாக்குதல் கூலித்தொழிலாளி கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2017 10:45 PM GMT (Updated: 21 Aug 2017 7:29 PM GMT)

சென்னை மெரினா போலீஸ்நிலையத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அகிலன். இவர் நேற்று முன்தினம் இரவு பீச் பக்கி வாகனம் மூலம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

சென்னை,

அப்போது குடிசைமாற்று வாரியம் அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை மணற்பரப்பில் 3 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை அகிலன் எச்சரித்தார்.

மதுபோதையில் இருந்த 3 பேரும் அகிலனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அகிலன் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் தப்ப முயற்சித்தனர். அப்போது ஒருவர் பொதுமக்கள் பிடியில் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட நபரை மெரினா போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அரிராம்(வயது 29) என்பதும், தப்பியோடியது அவருடைய நண்பர்கள் சதீஷ், தினேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story