இஸ்ரோவில் விஞ்ஞானி வேலை


இஸ்ரோவில் விஞ்ஞானி வேலை
x
தினத்தந்தி 25 Sep 2017 7:30 AM GMT (Updated: 25 Sep 2017 6:56 AM GMT)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ‘இஸ்ரோ’ என அழைக்கப்படுகிறது.

 இந்த ஆராய்ச்சி மையத்திற்கு உட்பட்ட கிளை நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்பாக இஸ்ரோ சென்டிரலைஸ்டு ரெக்ரூட்மென்ட் போர்டு (ICRB) எனப்படும் தேர்வு வாரியம் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு ஆராய்ச்சியாளர் பணிக்கு என்ஜினீயர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இவை தற்காலிக பணியிடங்களாகும். மொத்தம் 80 பணியிடங்கள் உள்ளன. இதில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 35 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 35 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 10 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 5-10-2017 தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணிகள் உள்ள பிரிவுகளில் பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகளை படித்து, 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 5-10-2017-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து Administrative Officer [ICRB], ISRO Headquarters, Bengaluru என்ற முகவரிக்கு 12-10-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு 24-12-2017-ந் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.isro.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Next Story