அழைப்பு உங்களுக்குத்தான் - யூ.பி.எஸ்.சி. - பி.இ.சி.ஐ.எல்.


அழைப்பு உங்களுக்குத்தான் - யூ.பி.எஸ்.சி. - பி.இ.சி.ஐ.எல்.
x
தினத்தந்தி 25 Sep 2017 10:30 AM GMT (Updated: 25 Sep 2017 7:22 AM GMT)

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. தற்போது ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர், அசிஸ்டன்ட் அட்வைசர் உள்ளிட்ட பணிகளுக்கு 7 பேரை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரி உள்ளது.

யூ.பி.எஸ்.சி. :

 எம்.எஸ்சி. மைக்ரோ பயாலஜி, எம்.எஸ்சி. பாட்டனி, மைகாலஜி, எம்.எஸ்சி.அக்ரிகல்சர், வேதியியல், உயிரி வேதியியல், பாரன்சிக் சயின்ஸ், இயற்பியல், என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை 28-9-2017-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

பி.இ.சி.ஐ.எல். :

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, இந்திய ஒலிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் (பி.இ.சி.ஐ.எல்.) நிறுவனத்தில் தற்போது மருத்துவ ஆய்வக தொழில்நுட்பனர் பணிக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார் கள். மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட், மெடிக்கல் லேபரேட்டரி சயின்ஸ் (இயற்பியல், வேதியியல், உயிரியியல், உயிர் தொழில்நுட்பவியல்) போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டுகளாவது பணியனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 3-10-2017-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியைச் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.becil.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story