விமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு


விமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2017 11:30 AM GMT (Updated: 25 Sep 2017 7:26 AM GMT)

விமான ஆணைய நிறுவனத்தில் 200 அதிகாரி வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய விமான நிலையங்களின் ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் பிரிவில் 50 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 50 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 100 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 30 வயதுடையவர்களாக இருந்தாலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 32 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். 30-9-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி:

சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் ஆகிய பிரிவில் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், 2016-ம் ஆண்டுக்கான கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-10-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aai.aero என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Next Story