மத்திய நிறுவனங்களில் பயிற்சிப்பணிகள்


மத்திய நிறுவனங்களில் பயிற்சிப்பணிகள்
x
தினத்தந்தி 25 Sep 2017 1:30 PM GMT (Updated: 25 Sep 2017 7:37 AM GMT)

பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்...

அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது 139 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வயர்மேன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட், ரெப்ரிஜிரேசன் அண்ட் ஏ.சி. மெக்கானிக் உள்ளிட்ட ஐ.டி.ஐ. பிரிவுகளில் 79 பேர் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு 16 முதல் 24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஐ.டி.ஐ. கல்வித்தகுதி, திறமைத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்த பணிகளுக்கு 3-10-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு 10-10-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் சென்று பெயரை பதிவு செய்துவிட்டு, விண்ணப்பத்தை தபால் மூலமாக மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குள் சென்றடையும் படி அனுப்பி வைக்க வேண்டும்.

இவை பற்றிய விவரங்களை http://apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மின்சார நிறுவனம்

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக், மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக் கானிக், மெஷினிஸ்ட், மெஷினிஸ்ட் கிரைண்டர், மோட்டார் மெக்கானிக் வெகிகிள், மெக்கானிக் ரெப்ரிஜிரேசன் ஏர் கண்டிஷனிங், டர்னர், வெல்டர், பவுண்டரி மேன், கார்பெண்டர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படிப்புகளுடன், தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் www.apprentices-hip.gov.in என்ற இணையதளத்தில் பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் பெல் ஐதராபாத் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அப்ரண்டிஸ் 2017-18 பணிகளுக்கான இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10-10-2017. web.bhelhyd.co.in என்ற இணையத்தில் முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Next Story