நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த ‘டியூசன் சென்டர்’ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த ‘டியூசன் சென்டர்’ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Oct 2017 10:45 PM GMT (Updated: 30 Oct 2017 9:22 PM GMT)

நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த ‘டியூசன் சென்டர்’ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் வந்து பெண் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில், மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சி வடக்கு காட்டூர் எம்.ஜி.ஆர். ராஜவீதியை சேர்ந்த சுசீலா (வயது36) என்ற பெண் கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர் மல்க கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நான் திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு டியூசன் சென்டரில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வந்தேன். அந்த டியூசன் சென்டரின் உரிமையாளர் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து விட்டார். இதுபற்றி நான் கேட்டபோது உன்னை இரண்டாவது மனைவியாக வைத்துக்கொள்கிறேன் என்றார். நான் மயக்கமாக இருந்த போது என்னை நிர்வாணமாக எடுத்து வைத்திருந்த படங்களை வலைத்தளத்தில் போட்டு விடுவேன் என மிரட்டி பலமுறை கற்பழித்தார். இதில் நான் கர்ப்பமானபோது கருவை கலைக்க சொன்னார். குழந்தை 6 மாத கருவாக வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில் கர்ப்பத்தை கலைக்க முடியாமல் குழந்தை பெற்றுக்கொண்டேன். டியூசன் சென்டர் உரிமையாளர் மூலம் எனக்கு பிறந்த குழந்தைக்கு தற்போது 3 வயதாகிறது. இந்த குழந்தையை காட்டி அவருடன் வாழ முயன்றபோது அவரும் அவரது உறவினர்களும் சேர்ந்து என்னை கொலை செய்வதாக மிரட்டினார்கள். நான் இதுபற்றி போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து பார்த்தால் இந்த குழந்தையின் தந்தை யார் என்பது தெரியவரும். எனவே டியூசன் சென்டர் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கைக்குழந்தையுடன் வந்து பெண் மனு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். 

Related Tags :
Next Story