வலியை உணராத இரும்புக் குழந்தை


வலியை உணராத இரும்புக் குழந்தை
x
தினத்தந்தி 15 Dec 2017 7:44 AM GMT (Updated: 15 Dec 2017 7:44 AM GMT)

ஒலிவியாவின் கதை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதில் அறிவியலும் ஒளிந்திருக்கிறது.

ங்கிலாந்தைச் சேர்ந்த ஒலிவியா பார்ன்ஸ்வொர்த் என்ற 7 வயது சிறுமியால், வலியை உணர முடியாது. மேலும் சாப்பாடும், தூக்கமும் இன்றி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறாள். ஒரு இயந்திரக் குழந்தையால் மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்தச் சிறுமையை ‘இரும்புக் குழந்தை’ என்று அழைக்கிறார்கள்.

ஒலிவியாவின் கதை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதில் அறிவியலும் ஒளிந்திருக்கிறது. ஆம்..! இன்று இரும்பு குழந்தையாக பார்க்கப்படும் ஒலிவியாவிற்கு, ‘குரோமோசோம்-6’ என்ற குறைபாடு இருக்கிறதாம். அதனால் தான் சாப்பாடு, தூக்கம், வலி என எதையும் உணராமல், இயந்திரக் குழந்தையாக அவள் வலம் வரு கிறாள்.

இந்த சங்கதி சமீபத்தில் தான் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒலிவியாவின் மீது கார் மோதியது. குழந்தைப் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று எழுந்து ஒன்றுமே நடக்காதது போல வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

வாயில் ரத்தம், கை, கால்களில் சிராய்ப்பைப் பார்த்து மருத்துவரிடம் அழைத்துச் சென்ற, ஒலிவியாவின் அம்மாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஒலிவியாவின் மார்பில் காரின் டயர் ஏறி இறங்கியதாம். இதை ஸ்கேனில் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள். மருத்துவர் ஒலிவியாவை விசாரிக்க ‘டயர் ஏறியது உண்மைதான். ஆனால் எனக்கு எந்த வலியும் தெரியவில்லை. இதை அம்மாவிடம் கூறினால் பயப்படுவார்கள் என்பதனாலேயே மறைத்துவிட்டேன்’ என்று அமைதியாக பதிலளித்திருக்கிறாள். பயந்துபோன மருத்துவர் ஒலிவியாவை முழு பரிசோதனை செய்தபோது தான், குரோமோசோம்-6 என்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். இந்த குறைபாடு மனிதனை இயந்திரமாக மாற்றிவிடுமாம். எத்தனை நாட்களானாலும் பசி எடுக்காது, தூக்கம் வராது, ஏன் கத்தியால் குத்தினால் கூட வலிக்காதாம்.

‘உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேருக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. வலி தெரியாத, உணவு, தூக்கம் இல்லாமல் ஒலிவியா போல இருப்பவர்கள் 100 பேர். குரோமோசோம் குறைபாடு உடையவர்களைச் சரி செய்வதற்கான மருத்துவம் தற்போது இல்லை. ஆனால் இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளைப் புரிந்துகொண்டு, நட்பு பாராட்டி அவர்களது பிரச்சினைகளை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்’ என்கிறார் மருத்துவர் பிவெர்லி சியர்லே. 

Next Story