நாய்க்கு செய்யப்படும் அநியாயச் செலவு


நாய்க்கு செய்யப்படும் அநியாயச் செலவு
x
தினத்தந்தி 15 Dec 2017 7:55 AM GMT (Updated: 15 Dec 2017 7:55 AM GMT)

‘இவனை நாய் என்று பார்த்தால், செலவுத் தொகை அநியாயமாகத் தோன்றலாம். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பார்த்தால் நியாயமான செலவாகத் தெரியும்.

இங்கிலாந்தில் வசிக்கும் எம்மா பட்டாரஸ்ஸி, தன் செல்ல நாய் பிரின்ஸின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு 5 லட்சம் ரூபாய்க்குப் பொருட்களை வாங்கியிருக்கிறார்.

பட்டாடைகள், சாண்டா க்ளாஸ் ஆடை, விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட மாலை என்று ஏராளமான பொருட்கள் பிரின்ஸுக்காக வாங்கிக் குவித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு சராசரி மனிதனின் கிறிஸ்துமஸ் செலவுகள் 5 ஆயிரம் ரூபாயில் முடிந்துவிட, நாய்க்கு ரூ.5 லட்சம் செலவழித்ததை நியாயம் பேசுகிறார், 24 வயதான எம்மா. அந்தம்மா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்....

‘இவனை நாய் என்று பார்த்தால், செலவுத் தொகை அநியாயமாகத் தோன்றலாம். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பார்த்தால் நியாயமான செலவாகத் தெரியும். பிரின்ஸ் மூலம் ஏராளமான சந்தோஷங்களை அனுபவித்து வருகிறேன். அந்த அன்புக்கு முன்னால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. பிரின்ஸுக்காக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலவு செய்கிறேன். காலை எழுந்ததும் பல் துலக்கி, மசாஜ் செய்து, குளித்த பிறகே சாப்பாடு. செயற்கை உரம் இல்லாத காய்கறிகள், கோழி இறைச்சி, வேக வைத்த முட்டை, பழக்கலவை, ஆட்டுப் பால், தேன், மசாலா தேநீர், இளநீர் போன்றவை தான் பிரின்ஸின் உணவுகள். இவனுக்கென்று அட்டகாசமான 200 ஆடைகள் இருக்கின்றன. என் சம்பாத்தியம் முழுவதையும் பிரின்ஸுக்குச் செலவு செய்தாலும் எனக்குத் திருப்தி வராது. என் திருமணத்தின்போது இதை விடச் சிறப்பாக பிரின்ஸைக் கவனித்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்’ என்கிறார் எம்மா. 

Next Story