ஆதம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் போக்குவரத்து துண்டிப்பு


ஆதம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2017 10:15 PM GMT (Updated: 15 Dec 2017 6:48 PM GMT)

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை குடிநீர் வாரிய ஆலந்தூர் பகுதி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை குடிநீர் வாரிய ஆலந்தூர் பகுதி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால்தான் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடைபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கருணீகர் தெருவில் சுமார் 100 மீட்டர் தூரம் பள்ளம் தோண்டி பாதாள சாக்கடை குழாயை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த தெரு சிமெண்டு சாலை என்பதால் அவற்றை உடைத்த பிறகு சாலையில் சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி சேதம் அடைந்த பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணியை செய்து முடிக்க குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும். அதுவரை அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் என்பதால் முக்கிய பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story