சிறப்பு துப்பறிவாளன்


சிறப்பு துப்பறிவாளன்
x
தினத்தந்தி 20 Jan 2018 7:00 AM GMT (Updated: 19 Jan 2018 10:03 AM GMT)

தங்கள் குழந்தைகளுக்குப் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கும் அமெரிக்கப் பெற்றோர், அதைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு வழியை நாடுகிறார்கள். இவர்களுக்குத் தனியார் ‘கே 9’ சேவையில் உள்ள மோப்ப நாய்கள் உதவுகின்றன.

மோப்ப நாய் வீட்டுக்குள் நுழைந்து படுக்கை அறை, குளியலறை, படிக்கும் அறை, கார் என்று சகல இடங்களையும் மோப்பம் பிடிக்கிறது. ஹெராயின், கோகெய்ன் போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைக் கப்பட்டுள்ளதா என்பதை  நுகர்ந்து பார்த்தே கண்டுபிடித்துவிடுகிறது.

மைகேல் டேவிஸ் என்பவர் ‘தி லாஸ்ட் சான்ஸ்’ என்ற பெயரில் போதைப் பொருள் கண்டுபிடிக் கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் போதைப் பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிப்பதுதான். ‘‘ஒரு சிறுவன் சாக்ஸுக்குள் 4 கிராம் ஹெராயினை ஒளித்து வைத்திருந்தான். இன்னொருவன் தன் 5 வயது தம்பியின் உணவு டப்பாவுக்குள் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்தான். ஆண்களைவிட பெண்கள் மிகத் திறமையாக போதைப் பொருட்களை ஒளித்து வைக்கிறார்கள். போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிவதையும் பெற்றோர் துன்பப்படுவதையும் பார்த்து, நான் இந்த வேலையைக் கையில் எடுத்துக் கொண்டேன். போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து, அவர்களை அதிலிருந்து மீட்பதுதான் எங்கள் நோக்கம். எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும் இந்த வேலை எனக்கு மன நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் மைக்கேல் டேவிஸ்.

Next Story