புழல் ஏரிக்கரை அருகே குப்பை தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் பயணிகள் அவதி||Scrap-consumed-by-fire--Smoky-passenger-Awadhi
home
முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowசென்னை
புழல் ஏரிக்கரை அருகே குப்பை தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் பயணிகள் அவதி
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
32
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 4:15 AM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 1:20 AM IST

செங்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளின் குப்பைகள் அனைத்தும் புழல் ஏரிக்கரை அருகே சாலையோரம் கொட்டி வைத்து உள்ளனர். இடம் பற்றாக்குறையால் சாலை அருகேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல் தேங்கி இருந்த குப்பையில் நேற்று இரவு யாரோ மர்மநபர்கள் தீ வைத்து விட்டனர்.

குப்பையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் செங்குன்றத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள் அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதி அடைந்தனர்.

இந்த பகுதியில் குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுவதால் அருகில் உள்ள புழல் ஏரி தண்ணீரும் மாசுபடுகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
32
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2800 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4