ஓடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது||By-runningBrainsPerformance-Increases
home
முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowசென்னை
ஓடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
64
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 3:56 PM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 3:56 PM IST
ம்மில் பலருக்கும் ஒரு தீராத ஆசை நிச்சயமாக இருக்கும். அது என்ன தெரியுமா? உடலையும் மனதையும் என்றும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்காக, தினசரி ஓடுவது, ‘ஜாகிங்’ செல்வது அல்லது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது என ஏதாவது ஒரு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அந்த தீராத ஆசை! ஆனால் பல்வேறு நியாயமான காரணங்கள் மற்றும் நொண்டிச் சாக்குகள் காரணமாக ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுகிறது. நாம் அனைவருமே இனி எப்படியாவது தினசரி ஓட்டம் அல்லது ஜாகிங் செய்தே ஆக வேண்டும்!

ஏன் தெரியுமா? ஒருவர் ஓடுவதனால் அவருடைய மூளையில் செயல்பாட்டு தொடர்புகள் (அதாவது செயல்பாடுகளுக்கு அடிப்படையான நரம்புகளுக்கு இடையிலான தொடர்புகள்) மேம்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானிடவியலரான டேவிட் ரைக்ளேன் உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர்.

ஒரு இசைக் கருவியை வாசிப்பது மூளை மீது ஏற்படுத்தக்கூடிய அதே வகையான தாக்கத்தை ஓட்டமும் ஏற்படுத்துகிறது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது! இந்த ஆய்வின் மூலம் ஓடுவது அல்லது இசைக் கருவியை வாசிப்பது போன்ற தினசரி செயல்பாடுகள் நம் மூளையின் செயல்பாட்டு திறனை எப்படி பாதிக்கிறது என்பது தொடர்பான புரிதல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, வயதான காலத்தில் ஏற்படக்கூடிய  அறிவுத்திறன் குறைபாட்டினை எப்படி சரி செய்வது என்பது குறித்த மேலதிக புரிதலையும் இந்த ஆய்வு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது!

கடந்த 15 வருடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகள் உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியானது மூளையின் மீது பலனுள்ள வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்டறிந்திருக்கின்றன என்றாலும் கூட, அவற்றில் பெரும்பாலான ஆய்வுகள் வயதானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

துரதிர்ஷ்டவசமாக, உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி ஆகியவை இளமைக்காலங்களில் மனிதர்களின் மூளை மீது எந்த வகையான தாக்கம் அல்லது மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் அது மிகவும் முக்கியமானது என்கிறார் மானிடவியலர் டேவிட் ரைக்ளேன். இந்த ஆய்வில், ‘கிராஸ் கண்ட்ரி ரன்னிங்’ என்று அழைக்கப்படும், 4 முதல் 12 கிலோமீட்டர் வரை ஓடக் கூடிய ஒருவகையான ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகின்ற, 18 முதல் 25 வயதுகொண்ட 11 பேருடைய மூளையின் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் படங்கள், சுமார் ஒரு வருடம் வரை எந்த வகையான ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொள்ளாத 11 பேருடைய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது!

பரிசோதனையின் முடிவில், ஓட்டப் பந்தய வீரர்களுடைய மூளையிலுள்ள, திட்டமிடல், முடிவு எடுத்தல் மற்றும் ஒரே சமயத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறன் ஆகிய செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ‘பிராண்டல் கார்டெக்ஸ்’ பகுதியில் செயல்பாட்டு தொடர்புத் திறனானது ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடாதவர்களின் செயல்பாட்டு தொடர்புத் திறனைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

முக்கியமாக, மூளையின் செயல்பாட்டு தொடர்புத் திறன் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த முழுமையான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. என்றாலும் கூட, ‘ஸ்ட்ரோக்’ போன்ற பாதிப்புகள் மூளையில் ஏற்படுத்தும் சேதமானது மூளையின் செயல்பாட்டு தொடர்புத் திறனை குறைத்துவிடும் என்பது தெரிந்த செய்திதான். உதாரணமாக அல்செய்மர்ஸ் போன்ற நோயுள்ளவர்களின் மூளையில் செயல்பாட்டு தொடர்புத் திறன் குறைந்துபோகும் என்பது முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எது எப்படியோ, இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் எடுக்கவிருக்கும் உறுதி மொழிகளில் ‘தினசரி ஓடுவது’ என்பதை முக்கியமான ஒரு உறுதிமொழியாக கண்டிப்பாக வைத்துக்கொள்வது சாலச் சிறந்தது என்றுதான் கூற வேண்டும்.
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
64
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*  
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2817 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4