பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல்||AIADMKThe-conflict-between-dmk
home
முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowசென்னை
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
33
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
புதன், ஜனவரி 11,2017, 4:15 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், ஜனவரி 11,2017, 1:25 AM IST

பூந்தமல்லி,

கொளப்பாக்கத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பொங்கல் பரிசு பொருட்கள்

தமிழக அரசின் சார்பில் ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியையொட்டி அ.தி.மு.க., தி.மு.க.வினர் தங்கள் பங்குக்கு கட்சி கொடிகளை கட்டி வைத்திருந்தனர்.

ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்காமல் அ.தி.மு.க.வினர் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியை வரவழைத்து பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தனர். இது பற்றி அறிந்த தா.மோ.அன்பரசன் கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கேட்டுள்ளார்.

மோதல்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க அமைச்சர் வருகிறார் என்று அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். ஆனால் அமைச்சர் யாரும் வராததால் சிறிது நேரத்தில் பழனி எம்.எல்.ஏ.வை வைத்து பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.

இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் கைகளால் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதையடுத்து முதலில் அ.தி.மு.க.வினரும், பின்னர் தி.மு.க.வினரும் பொதுமக்கள் சிலருக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி விட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மக்கள் பாதிப்பில் இருக்கும் போது யாரும் வந்து பார்ப்பது இல்லை. ஆனால் அரசு வழங்கும் உதவிகளை வழங்கும்போது மட்டும் போட்டி போடுகின்றனர் என்று குற்றம்சாட்டினர்.

கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
33
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2798 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4