ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்–தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு||Stressing-hold-jallikattu--Students-Rally-in-Salem
home
முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowசேலம்
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்–தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
23
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
புதன், ஜனவரி 11,2017, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 11:41 PM IST

சேலம்,

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அரசியல் கட்சியினர் ஒருபுறம் வலியுறுத்தி வரும் வேளையில், பல்வேறு மாணவ அமைப்புகள் தற்போது போராட்டத்தில் இறங்கி உள்ளன. இதனால், தமிழகத்தில் கட்டாயம் ஜல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை சார்பில் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தவறிய மத்திய அரசை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று திரண்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கண்டன கோ‌ஷம்

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்வரன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற மாணவ–மாணவிகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால், தடையை மீறி நிச்சயமாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம். இதனால், ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சந்திக்க தயாராக உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு பலமுறை உத்தரவு பிறப்பித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பதைபோல, சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீறி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்‘‘ என்றனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே, மதியம் 12.30 மணிக்கு சேலம் செரிரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து ரோட்டில் திரண்டனர். பின்னர் கல்லூரி நுழை வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இந்த தர்ணா போராட்டத்திற்கு மாணவர் அமைப்பை சேர்ந்த ஜீவா, ஆசீப், சிவா, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் தர்ணா போராட்டத்தின்போது கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சமரசம்

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த சேலம் அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறிது நேரம் போராட்டம் நடத்தி விட்டு மாணவ–மாணவிகள் கலைந்து சென்றனர்.

கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
23
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2788 crone
2
img
Bronze 992 crone
3
img
Bronze 832 crone
4