பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஆம்பூர் வங்கிகளில் பணம் எடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு தள்ளுமுள்ளுவில் பெண்கள் காயம்||Pongal-festival-approaches--Ambur-bankThousands-takePush
home
முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowவேலூர்
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஆம்பூர் வங்கிகளில் பணம் எடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு தள்ளுமுள்ளுவில் பெண்கள் காயம்
கருத்துகள்
1
வாசிக்கப்பட்டது
29
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
புதன், ஜனவரி 11,2017, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 6:23 PM IST

ஆம்பூர்,

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஆம்பூர் வங்கிகளில் பணம் எடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் காயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போனஸ் மற்றும் சம்பளம்

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்தப்படி பணம் வழங்காததாலும், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடியே கிடப்பதாலும் பொதுமக்களும், தொழிலாளர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான சம்பளத்தை நிர்வாகமானது வங்கியில் செலுத்துகிறது.

தற்போது தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் மற்றும் சம்பளம் ஆகியவை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாள் விடுமுறை

பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடி கிடப்பதால் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணத்தை எடுத்து கொள்ள வசதியாக சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து உள்ளது.

ஆம்பூரில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் பணம் வழங்கப்பட்டதால் அனைத்து வங்கிகளிலும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆம்பூர் பை–பாஸ் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், கார்பரே‌ஷன் வங்கி, பெடரல் வங்கியில் ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதலே காத்து இருந்தனர். ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வசதியாக ஆண்கள், பெண்களுக்கு என தனி, தனியாக வரிசை ஏற்படுத்தப்பட்டு, கம்புகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் வழியாக தொழிலாளர்கள் வரிசையாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடுமையான வெயில் வாட்டியதால் வெயிலில் நிற்க முடியாமல் ஏராளமான பெண்கள் தவித்தனர்.

தள்ளுமுள்ளுவில் பெண்கள் காயம்

நேரம் செல்ல செல்ல கூட்டத்தை போலீசாரால் ஒழுங்குப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெண் தொழிலாளர்கள் ஒருவரை, ஒருவர் தள்ளிக்கொண்டு முந்தி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடுப்பு கம்பிகளை தாண்டியும் கீழே விழ ஆரம்பித்தனர். இதில் சில பெண்கள் காயம் அடைந்தனர். அவர்களை அங்கு நின்று கொண்டிருந்த போலீசாரும், பொதுமக்களும் அவர்களை தூக்கி நிறுத்தி தண்ணீர் கொடுத்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது பண்டிகை காலம் என்பதாலும், ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடப்பதாலும் தொழிலாளர்கள் வங்கியில் குவிந்துள்ளனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணத்தை நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்
1
வாசிக்கப்பட்டது
29
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*  
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2817 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4