தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார் + "||" + Kejriwal to Prime Minister Modi Inquired Welfare

கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு உணவு அருந்தும் பகுதியில் பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் சாத

புதுடெல்லி

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு உணவு அருந்தும் பகுதியில் பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் சாதாரண முறையில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது, கெஜ்ரிவாலின் உடல் நலம் குறித்து மோடி விசாரித்தார். அதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், நான் நலமாக இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.

தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த கெஜ்ரிவால் அண்மையில், பிரதமர் மோடியின் அறிவுரையின் பேரில் பெங்களூருவில் தங்கியிருந்து 10 நாட்கள் இயற்கை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.