தேசிய செய்திகள்

மறைந்த தியாகி மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு பத்ம விபூஷண் விருது சுதாரகுநாதன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார் + "||" + To LK Advani Padma Vibhushan Award

மறைந்த தியாகி மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு பத்ம விபூஷண் விருது சுதாரகுநாதன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

மறைந்த தியாகி மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு பத்ம விபூஷண் விருது சுதாரகுநாதன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்
மறைந்த தியாகி மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதும், எல்.கே.அத்வானி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருதும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, பாடகி சுதாரகுநாதன் ஆகியோருக்கு பத்மபூஷண் உள்பட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரண

புதுடெல்லி

மறைந்த தியாகி மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதும், எல்.கே.அத்வானி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருதும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, பாடகி சுதாரகுநாதன் ஆகியோருக்கு பத்மபூஷண் உள்பட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வழங்கினார்.

பாரத ரத்னா விருது

முன்னாள் பிரதமரும், மூத்த பா.ஜனதா தலைவருமான வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட தியாகி மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. கடந்த 27–ந்தேதி ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, வாஜ்பாய் இல்லத்துக்கு சென்று விருதை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. மறைந்த தியாகி மதன்மோகன் மாளவியாவின் பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். மாளவியாவின் சுதந்திர போராட்டத்துக்காகவும், அவர் ஆற்றிய கல்விப் பணிக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

மாளவியா பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசுக்கு 4 முறை தலைவராக இருந்திருக்கிறார். 1934–ம் ஆண்டு அவர் காங்கிரசில் இருந்து விலகினார். இந்து மகாசபையின் ஆரம்பகட்ட தலைவர்களில் இவரும் ஒருவர். அவரது 153–வது பிறந்த தினத்துக்கு முந்தைய நாள் இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்.கே.அத்வானி, பாதல்

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பஞ்சாப் மாநில முதல்–மந்திரியும், சிரோமனி அகாலிதளம் தலைவருமான பிரகாஷ்சிங் பாதல், சமஸ்கிருத இலக்கியவாதி ஜகத்குரு சுவாமி ராம்பத்ராச்சார்யா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

பத்ம பூஷண் விருது பெற்றவர்கள் வருமாறு:–

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி, கர்நாடக இசை பாடகி சுதாரகுநாதன், பத்திரிகையாளர்கள் ஸ்வாபன்தாஸ் குப்தா, ரஜத்சர்மா, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஹரிஷ் சால்வே, டேவிட் பிராவ்லே, பில், மெலிண்டா கேட்ஸ், சாய்சிரோ மிசுமி (98 வயதான இவர் நேதாஜி ஜப்பான் சென்றபோது உதவியவர்), சத்பால் (மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற சுஷில்குமாரின் பயிற்சியாளர்), அசோக் சேத், காத்க் சிங் வால்டியா,

பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்

பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:–

சினிமா இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி, எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா பிரசூன் ஜோஷி, மஞ்சுளா அனாகனி, கன்யாகுமாரி அவாராசாலா, பேராசிரியர் ஹுவாங் போஸ்ஹெங், நரேஷ் பேடி, ஜீன் கிளாடி கேரியர்ரே, கியான் சதுர்வேதி, ஜெயகுமார் சிக்காலா, அசோக் குலாடி, டாக்டர் ரண்தீப் குலேரியா, ஜார்ஜ் ஹர்ட், ராகுல் ஜெயின், பிரபுல்லா கர், உஷாகிரண் கான், அல்கா கிருபளானி, ஹர்ஷ்குமார், புருசோத்தம மலாயா, ஜனக் பல்தா மெக்கில்லன், தரக் ஜானுபாய் மெக்தா, ஷெவாங் நோர்பெல், பிம்லா போட்டார், என்.பிரபாகர், என்.பிரஹலாத், சவுமித்ரா ராவத், அன்னெட்டெ சிச்மியெட்சென், பிரபல கார்டூன் பாத்திரங்களை உருவாக்கிய பிரான்குமார் ஷர்மா (மறைவுக்கு பின்), பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் ஆக்கி அணி தலைவர் சர்தார் சிங், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அருனிமா சின்ஹா, நிகில் தாண்டன்.

விருதுகள் அறிவிக்கப்பட்ட 49 பேர் அழைக்கப்பட்டதில், பில், மெலிண்டா கேட்ஸ் உள்பட 6 பேர் சொந்த காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்ற 43 பேருக்கும் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்பட மொத்தம் 109 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எஞ்சியுள்ள 60 பேருக்கு அடுத்த மாதம் 8–ந்தேதி விருதுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

பிரதமர் பங்கேற்றார்

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, ஸ்மிரிதி இரானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டாலும், மன்மோகன்சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.