தேசிய செய்திகள்

19–ந்தேதி, விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு + "||" + Farmers rally Rahul Gandhi attends

19–ந்தேதி, விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு

19–ந்தேதி, விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு
டெல்லியில் 19–ந்தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது. விடுமுறையில் ராகுல் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில்

புதுடெல்லி

டெல்லியில் 19–ந்தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது.

விடுமுறையில் ராகுல்

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் அவர் விடுமுறை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைவராக வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற சில மாதங்களில் கட்சிக்கு புதிய தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதில் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ராகுல் காந்தி தற்போது எங்கே இருக்கிறார்? அவரது இந்த நீண்ட விடுமுறை எப்போது முடிவுக்கு வரும்? அவர் பொது வாழ்வுக்கு மீண்டும் எப்போது வருவார்? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

விவசாயிகள் பேரணியில் பேசுகிறார்

இந்தநிலையில் ஏப்ரல் 19–ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக நடைபெறும் இந்த பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுவார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய்சிங் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் ராகுல் காந்தி விடுமுறை முடிவுக்கு வருகிறது.

அவதூறு வழக்கு

இந்த நிலையில் ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றின் விசாரணை மராட்டிய மாநிலம் பிவாண்டி கோர்ட்டில் நேற்று நடந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, ‘ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என அவரது வக்கீல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு மனுதாரர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் ராகுல் காந்தி மே மாதம் 8–ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக கோர்ட்டில் ஆஜராவார் என அவரது வக்கீல் எழுத்து மூலம் உறுதி அளித்தார். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை மே 8–ந்தேதிக்கு நடைபெறும் என நீதிபதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.