தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணை 4 வாரம் ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Mullaperiyar Dam Case

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணை 4 வாரம் ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணை 4 வாரம் ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தமிழக அரசு வழக்கு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத

புதுடெல்லி

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

தமிழக அரசு வழக்கு

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

கடந்த பிப்ரவரி 19–ந்தேதி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிட்டது.

கேரளா பதில் மனு

இந்த நிலையில் கேரள அரசின் சார்பில் வக்கீல் ரமேஷ் பாபு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நியமிக்க தேவை இல்லை என்றும், எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.உமாபதி, கேரள அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் மீது எதிர்பதில் மனு செய்ய மேலும் 4 வார காலஅவகாசம் தேவை என்று கோரினார்.

அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.