தேசிய செய்திகள்

காங்கிரஸ் துணைத்தலைவர் ‘ராகுல் காந்தி, மே 8–ந்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவார்’ வக்கீல் தகவல் + "||" + Defamation case Rahul to appear before court on May 8

காங்கிரஸ் துணைத்தலைவர் ‘ராகுல் காந்தி, மே 8–ந்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவார்’ வக்கீல் தகவல்

காங்கிரஸ் துணைத்தலைவர் ‘ராகுல் காந்தி, மே 8–ந்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவார்’ வக்கீல் தகவல்
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் அவர் விடுமுறை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தானே,

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மே 8–ந்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவார் என மராட்டிய கோர்ட்டில் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது.

விடுமுறையில் ராகுல்

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் அவர் விடுமுறை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைவராக வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற சில மாதங்களில் கட்சிக்கு புதிய தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதில் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ராகுல் காந்தி தற்போது எங்கே இருக்கிறார்? அவரது இந்த நீண்ட விடுமுறை எப்போது முடிவுக்கு வரும்? அவர் பொது வாழ்வுக்கு மீண்டும் எப்போது வருவார்? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

அவதூறு வழக்கு

இந்த நிலையில் ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றின் விசாரணை மராட்டிய மாநிலம் பிவாண்டி கோர்ட்டில் நேற்று நடந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, ‘ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என அவரது வக்கீல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு மனுதாரர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் ராகுல் காந்தி மே மாதம் 8–ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக கோர்ட்டில் ஆஜராவார் என அவரது வக்கீல் எழுத்து மூலம் உறுதி அளித்தார். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை மே 8–ந்தேதிக்கு நடைபெறும் என நீதிபதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வரும்

இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் வக்கீல்கள் நாராயண் ஐயர் மற்றும் பி.கே.தகேபால்கர் ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர் சார்பில் கணேஷ் தர்கால்கர் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் ஆஜராக மே 8–ந்தேதிக்குள் ராகுல் காந்தி வந்து விடுவார் என கோர்ட்டில் கூறப்பட்டு இருப்பதால், அதற்கு முன் ராகுலின் விடுமுறை முடிவுக்கு வரும் என தெரிகிறது.