தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் + "||" + JK Floods MeT forecasts heavy rain in Kashmir valley

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டு உள்ளநிலையில் பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அனந்த் நாக் மாவட்டத்தில் சங்கம் என்னுமிடத்தில் வெள்ள அபாய அளவான 21 அடி உயரத்தை தாண்டி 22.35 அடி உயரத்துக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதேபோல் ராம்முன்சி என்னுமிடத்தில் ஜீலம் நதியின் வெள்ள அபாய அளவு 18 அடி. ஆனால், அங்கு 19.40 அடி உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஜீலம் நதிக் கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பத்காம் மாவட்டத்தில் உள்ள லேடன் கிராமத்தில் மண் அரிப்பு காரணமாக பூமியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதில், அங்கிருந்த 2 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. அந்த வீடுகளில் வசித்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழை பெய்யும் நிலையில் மாநிலத்தில் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. பள்ளத்தாக்கில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஏப்ரல்-4ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 7 மாவட்டங்களிலும் பனிப்பாறைச் சரிவு ஏற்படலாம் என்றும் எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும் வகையில் மாநிலத்தில் உள்ள ராணுவமும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.