தேசிய செய்திகள்

நிலம் கையகபடுத்தும் சட்டத்துக்கு எதிராக அடுத்த மாதம் காங்கிரஸ் பிரமாண்ட பேரணி ராகுல்காந்தி கலந்து கொள்கிறார் + "||" + Rahul Gandhi to attend Congress Kisan rally on 19 April

நிலம் கையகபடுத்தும் சட்டத்துக்கு எதிராக அடுத்த மாதம் காங்கிரஸ் பிரமாண்ட பேரணி ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்

நிலம் கையகபடுத்தும் சட்டத்துக்கு எதிராக அடுத்த மாதம்  காங்கிரஸ் பிரமாண்ட பேரணி  ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன், டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் உள்பட முக்கியமான விவாதங்கள் நடைபெறும் சமயத்தில்
புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன், டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் உள்பட முக்கியமான விவாதங்கள் நடைபெறும் சமயத்தில் ராகுல்காந்தி ஓய்வு எடுக்க சென்றதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தனது விடுப்பை மீண்டும் ராகுல்காந்தி நீட்டித்தார். அநேகமாக மார்ச் மாத இறுதியில்தான் ராகுல் காந்தி டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.

ஒரு மாத காலமாக தங்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுலைக் காணவில்லை என்றும், ராகுலை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அமேதி தொகுதியில் சமீபத்தில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 19ஆம் தேதி நடக்கும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம் ஏற்படுத்தியுள்ள அரசியல் சூழ்நிலை மாற்றத்தை காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக மாற்ற சோனியா திட்டமிட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் துவண்டு போன காங்கிரஸ் தொண்டர்கள், ராகுலின் தற்காலிக விடுமுறையால் மேலும் சோர்ந்து போனார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி விடுமுறையில் சென்ற ராகுல், எங்கு தங்கி ஓய்வு எடுத்து  வருகிறார் என்பது கூட தெரியவில்லை. இதனால் அவரது சொந்த தொகுதியிலேயே அவரை காணவில்லை என்று நோட் டீசுகள் ஒட்டி விட்டனர். இதையடுத்து ராகுலின் வருகையை மிகவும் எழுச்சி பெறும் வகையில் காட்ட சோனியா வியூகம் வகுத்துள்ளார்.

அந்த வியூகப்படி டெல்லி யில் வரும் 19-ந்தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் பங்கேற்கும் மிகப்பிர மாண்டமான பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நிலம் கையகப் படுத்துதல் சட்டம், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி நாடெங்கும் உள்ள விவசாயிகளை டெல்லியில் திரட்டி போராட்டம் நடத்த காங்கிரஸ்  தீவிரமாக ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி உள்ளது.

சோனியா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ராகுல்காந்தி உள்பட காங்கிரசின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
விவசாயிகளை திரட்டுவ தன் மூலம், ஏழை - எளிய மக்களின் நண்பன் காங் கிரஸ் மட்டுமே என்ற பிரசாரத்தை நடத்த சோனியா விரும்புகிறார். இதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களை சுறுசுறுப்பாக்க முடியும் என்று சோனியா நம்புகிறார்.

தலைநகர் டெல்லியை குலுங்கச் செய்யும் வகையில் விவசாயிகள் பேரணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் அன்று விவசாயிகள் மத்தி யில் ராகுல்காந்தி பேசுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெரி வித்துள்ளார்.ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ராகுல் டெல்லி திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவரது மறு பிரவேசத்தை எழுச்சி ஏற் படுத்தும் வகையில் காட்டவே விவசாயிகள் பேரணிக்கு நாடெங்கும் இருந்து லட்சக் கணக்கானவர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிலம் கைய கப்படுத்துதல் அவசரச் சட்டத்தை வலுவாக  எதிர்த்த மாதிரியும் இருக்கும். அதே சமயத்தில் ராகுல்காந்தியின் மறுபிரவேச அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது மாதிரியும் இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் ராகுல் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.